இளைஞர்களிடம் பேசும் கலை

“என் பையன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கறான்” என்றார் நண்பர் ஒருவர் மிகுந்த வருத்தத்தோடு. அவனுக்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த வேலையை உதறி, அழுத்தம் குறைவான ஆனால் சற்றே வருமானம் குறைவான வேலையொன்றில் சேர்ந்துகொண்டு, மகனைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தினார் அவர். இன்று பையன் அவரைக் கண்ணெடுத்தும் காணத் தவிர்க்கிறான். வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். ” நண்பர்களுடன் பேசுவதில் ஒரு பகுதி கூட வீட்டில் […]

வெள்ளை ஒளியும் கடவுளும்

“பையன் என்னமோ கேக்கறான். பதில் சொல்லுங்கோ, பாப்போம்” சுந்தர் ஐயங்கார் ( பெயரில் ஐயங்கார் என்றிருப்பதால் அவர் தீவிர வைணவரல்ல. மூன்றாம் தலைமுறையாக பிறந்ததே மும்பையில் என்பதால், ஸர் நேம் என வந்தது) கேட்டுவிட்டு, ஒரு புறமாகச் சாய்ந்து, தன்னிரு கைகளையும் தட்டி கால்களுக்கிடையே சேர்த்துவைத்துக்கொண்டு சிரித்தார். முகத்தில் பெருமை. “என்னடா கேட்டே?” என்றேன். ஒருவருடம் முன்பான உரையாடல் இது. கோவிட் தீவிரம் அறியாது, பலரும் கோவிட் பற்றி பாட்டு, கவிதை என எழுதிக் கொண்டிருந்த காலம். […]

கதை வாசிக்கும் முறை.

ஜி மெயிலை நேற்றுதான் பல நாட்களுக்குப் பிறகு திறந்தேன். மென்னியை நெறிக்கும் சிறு சிறு வேலைகளில் சொந்த வாழ்வு பல நேரம் மறந்து போகிறது. இரு மின்னஞ்சல்கள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று 7.83 ஹெர்ட்ஸ் நாவலில் வரும் ஹார்ப் (HAARP) குறித்த கேள்வி .”வாசிப்பவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? ஒரு மேட்டிமைத்தனம் தெரிகிறது” என்பதாகச் சென்றது. அவருக்கு பதில் எழுதினேன். ” வாசிப்பவர் மேலும் தெரிந்துகொள்ள முயல்வார், ஆவலாக இருப்பார் என்று நினைக்கிறேன். அந்த எதிர்பார்ப்பு […]