கோமளவல்லி

கூடப்பிறந்தாத்தான் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ ஆறதில்லை. ஒரு பாட்டுல வரும்பாரு “ சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை; ஒரு துணையிலாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை.”. ரத்த சம்பத்தத்தை மனசுதான் தீர்மானிக்கறது.

சீதம்மாள்.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. “தூத்தல் போடறது. சீக்கிரம் வாசல்ல உலத்தியிருக்கற துணியெல்லாம் எடுங்கோடி”  பரபரத்தாள் வேங்கிப் பாட்டி. எழ முடியாது, கண் பார்வை கொஞ்சம் மங்கல் என்பதுமட்டுமே தொண்ணூற்று நான்கு வயதில் அவளுக்கு   இருக்கும் உபாதைகள். “வேங்கிப்பாட்டிக்கு மூக்கும் நாக்கும் ரொம்பவே தூக்கல். பாரேன். ஒரு துளி தூத்தலுக்கு வர்ற மண் வாசனைபிடிச்சுச் சொல்றா” பவானி மாமி முணுமுணுப்பில் ஒரு வியப்பு தெரிந்தது. “ டீ, இவளே, செத்த வாசல்ல துணியெல்லாம் எடுத்துண்டு வா. நனைஞ்ச்சுடுத்துன்னா, பெரிய […]

தாங்கு மரங்கள்

அவசரமாய்ச் சென்று மொபைலை எடுக்குமுன் அழைப்பு நின்றுவிட்டிருந்தது. “எருமை” என்று பெயர் மிஸ்டு கால் லிஸ்ட்டில் தெரிந்ததில் ஒரு புன்னகையுடன் அழைத்தார் ரமேஷ். “லே, எங்கிட்டுப் போயிட்ட?” என்றார் தாமஸ் மறுபுறம். “ செத்திட்டியா,மூதி! நேத்துலேர்ந்து கால் போட்டிட்டிருக்கேன்” “ஸாரி மக்கா” என்றார் ரமேஷ் “ நானே காலேல கூப்பிடமுன்னு இருந்தேன். மறதி அதிகமாயிட்டிருக்கடே.” “எல்லாருக்கும் அம்பத்து நாலு தாண்டிட்டு. காலேஜ்ல இருந்தமாரியா இப்ப இருக்க முடியுது? சரி, விசயத்தச் சொல்லிடுதேன். இந்த மகாலிங்கம் வர்றான் இங்கிட்டு. […]

நாகலட்சுமி

நாகலெட்சுமி மெஸ் என்ற உணவு விடுதி, ஒரு பெட்ரூம், ஹால் கிட்சன் என்ற வீட்டமைப்பில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. குடியிருப்பு வளாகத்தினுள் வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், எடுப்புச் சாப்பாடு என்ற அளவில் நடந்து வருகிறது. நாகலட்சுமி ,மெஸ் வைக்குமுன் வங்கி ஒன்றில் ஆஃபீஸராக வேலை பார்த்தார் எனவும், பிடிக்காது போகவே, ஊரில் ப்ரைவேட் ட்யூஷன் தொடங்கி, அதன்பின் மெஸ் நடத்தத் தொடங்கினார் என்பதும் கொசுறு செய்திகள். வளாகத்தில் […]

ரங்கம்மாள்

எப்போது ரங்கம்மாள் ,கோபாலயங்கார் வீட்டில் வந்தாள் என எவருக்கும் தெரியவில்லை. கோபாலய்யங்கார் பக்கவாதத்தில் படுத்ததும், முதுகு வளைந்து போன அவரது மனைவி ராஜம், தன்னால் வீட்டையும் பார்த்துக்கொண்டு அவரையும் பார்க்க முடியாதென்று,  அவருக்குப் பணிவிடை செய்ய அவரது ஒன்றுவிட்ட அத்தையின் மகளை திருக்குறுங்குடியில் இருந்து அழைத்து வந்தாள்  என்றும், பிரம்மதேசம் கிராமத்தில் வசித்த அவரது ஒன்றுவிட்ட அக்காவின் மகள் அவள் என்றும், அக்கா இறந்ததும், அவள் இங்கு வந்துவிட்டாள் என்றும் பல கதைகள் உண்டு. எல்லாருக்கும் அறிந்த […]

தாயுமானவள்

தாயுமானவள் செல்ஃபோனை வீட்டில் விட்டுச் சென்றிருந்தேன். பார்த்தால் 4 தவறிய அழைப்புகள். இரண்டு பால விநாயகம் அண்ணனிடமிருந்து.  மற்ற ரெண்டு தெரியவில்லை. புது எண். “ தம்பியை உன்னிடம் பேசச்சொன்னேன். அவன் கூப்பிட்டிருப்பானே?” என்றார் பாலா அண்ணன். “ கொஞ்ச நாளாவே கிறுக்கு பிடிச்சு அலையறான். எனக்கும் அவனுக்கும் சண்டை வந்து, அம்மா, உன்னைப் பேசச்சொன்னாங்க. என்னன்னு கேளு” என்றார் கோபமும் விரக்தியுமாக.  “சும்மா பேசு. அதான் அம்மா சொல்லிட்டாங்கள்ல?” என்ற பாலா அண்ணனின் சொற்கள் உறுதி […]

நல்ல பிள்ளைக்கு நீலம்

1974 – அம்பாசமுத்திரம் எதுவும் சொல்வதற்கு முன் அம்மா,  “ மறந்தே போயிடுத்து. டேய்,  முடி வெட்டிண்டு வா.சீக்கிரம் போ. கூட்டம் வந்துடப் போறது”   ‘இன்னிக்கு ஞாயித்துக்கிழமை’ அண்ணன் வேண்டுமென்றே கத்திச் சொன்னான். ஒரு ஸேடிஸம் இருப்பதாகப் பட்டது எனக்கு. கிருஷ்ணன் கோவில் தெருவில் 1970களில் வாழ்ந்த பொற்காலங்களில் சில களப்பிரர் காலங்களும் இல்லாமலில்லை. டூ லேட். கடுப்புடன் 25 பைசாவை டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு , திட்டிக்கொண்டே , ஆர்ச் நோக்கி நடக்கலானேன். முடி […]

ஆவுடைநாயகி 1

“ஆவுடையக்கா எங்க வீட்டுப்பக்கத்துலதான் இருந்தாங்க” இந்தச் செய்தியில் பரபரப்பானேன். வீரராகவனுக்கு உடனே போன் செய்தேன். “ஆங்! அடுத்த தெருன்னு சொல்லலாம்.. தாமரை லே அவுட்ல கடைசி வீடு. நாங்க முல்லை லே அவுட். இதுல ரெண்டு பெட்ரூம்”இடைமறித்தேன். எத்தனை BHK என்பது முக்கியமல்ல. எளவெடுத்தவனே! வாழ்வில் ஒருதடவையாவது ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல். “ஆவுடையக்கா போனவருசம் காலிபண்ணாங்கன்னு சொல்றாங்க. கோவிட் நேரம் பாத்தியா? யார் என்ன ஆனாங்கன்னு சரியாத் தெரியலை. “அடச் சே.. அடுத்ததாகச் சொன்னான் ” […]

காவல் மீன்கள்

வானம் மந்தமாக , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாமெனப் பயமுறுத்தியது. பேராசிரியர் அழகர்சாமி,  ஆய்வு மாணவி தமயந்தியை ஏறிட்டார். ”வீட்டுக்குக் கிளம்பும்மா. மழை பெருசா வரும்போல இருக்கு”  “வணக்கம் சார்”. ஜோசப் வாசலில் நின்றிருந்தான். “கிளம்பிட்டீங்களா ப்ரொபஸர்? அப்ப நாளைக்கு வர்றேன்” .  “ வராதவன் வந்திருக்க. சொல்லு. பேசிக்கிட்டே போலாம்” மூவரும் பல்கலை இயற்பியல் துறையின் நீண்ட தாழ்வாரத்தில் நடந்தனர். “நீங்க போனவாரம் ‘அறிவியல் அறிவோம்’ கழகத்துல பேசினது மனசுல ஓடிட்டிருக்கு சார். ஒவ்வொரு செயலிலும் […]