வெள்ளை ஒளியும் கடவுளும்

“பையன் என்னமோ கேக்கறான். பதில் சொல்லுங்கோ, பாப்போம்” சுந்தர் ஐயங்கார் ( பெயரில் ஐயங்கார் என்றிருப்பதால் அவர் தீவிர வைணவரல்ல. மூன்றாம் தலைமுறையாக பிறந்ததே மும்பையில் என்பதால், ஸர் நேம் என வந்தது) கேட்டுவிட்டு, ஒரு புறமாகச் சாய்ந்து, தன்னிரு கைகளையும் தட்டி கால்களுக்கிடையே சேர்த்துவைத்துக்கொண்டு சிரித்தார். முகத்தில் பெருமை. “என்னடா கேட்டே?” என்றேன். ஒருவருடம் முன்பான உரையாடல் இது. கோவிட் தீவிரம் அறியாது, பலரும் கோவிட் பற்றி பாட்டு, கவிதை என எழுதிக் கொண்டிருந்த காலம். […]

ஆவுடைநாயகி 1

“ஆவுடையக்கா எங்க வீட்டுப்பக்கத்துலதான் இருந்தாங்க” இந்தச் செய்தியில் பரபரப்பானேன். வீரராகவனுக்கு உடனே போன் செய்தேன். “ஆங்! அடுத்த தெருன்னு சொல்லலாம்.. தாமரை லே அவுட்ல கடைசி வீடு. நாங்க முல்லை லே அவுட். இதுல ரெண்டு பெட்ரூம்”இடைமறித்தேன். எத்தனை BHK என்பது முக்கியமல்ல. எளவெடுத்தவனே! வாழ்வில் ஒருதடவையாவது ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல். “ஆவுடையக்கா போனவருசம் காலிபண்ணாங்கன்னு சொல்றாங்க. கோவிட் நேரம் பாத்தியா? யார் என்ன ஆனாங்கன்னு சரியாத் தெரியலை. “அடச் சே.. அடுத்ததாகச் சொன்னான் ” […]

ஒரு சொல் அறிய…

பக்தன் என்றால் எல்லாம் இறைவன் சார்ந்ததாகத்தான் சிந்தனையும், செயலும் , சொல்லும் இருக்கவேண்டுமா? இல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஒருவன் செய்யாவிட்டால்  குடிகள் எப்படி தழைக்கும்?’ இந்தக் கேள்வியை ஒரு குருவிடம் ஒருவ்ர் கேட்டதை சமீபத்தில் ஒரு வீடியோவில் காண நேர்ந்தது. அவர் புன்னகையுடன் “ காமம் தேவைதான். எப்பேர்ப்பட்ட காமம் தேவை? உலகம் தொடர்ந்து இயங்க்கத் தேவையான காமம் என்ற அளவில். சம்பாதிக்க ஆசைப்படுகிறாய். பொருள் ஈட்டுவதில், பிறர்க்கும் உதவி செய்கிறாய். அந்த அளவில் நல்லது. உடலைப் […]

வினையாற்றுவிதம்

அப்பா ஒரு கேள்வி” பயல் இப்படி ஆரம்பித்தாலே, டென்ஷனாகும். இன்னிக்கு கீதை படிக்கலாம்னு இருந்தேன். வேறென்ன புத்தகம் பாக்க வேண்டியிருக்குமோ? என்று கவலையோடு அவனை ஏறிட்டேன்.“கர்மண்யேவ அதிகாரஸ்தே -ன்னு நேத்திக்குச் சொன்னீங்க. ஒரு வொர்க் செய்யமட்டும்தான் ரைட்ஸ் இருக்கு; அதுனோட ரிஸல்ட்டுல இல்லை”ன்னீங்க. அப்ப, எப்படி மோட்டிவேட்டடா இருக்க முடியும்? எனக்கு ரிசல்ட் வரலேன்னா, ஏன் செய்யணும்?” இத்தனை தமிங்கில வார்த்தைகளைப் போட்டு அவன் பேசுகிறானென்றால், நிஜமாகவே குழம்பியிருக்கிறான் என்பது தெளிவு. வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம், கேள்வியின் […]