அஷ்ட ப்ரபந்தம் – முன்னுரை

வைணவ நூட்களை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர் , நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தோடு நின்றுவிடுவார்கள். அதுவும் அதன் ஆழ்பொருள் உணராமலே, அனுசந்திப்பது என்ற அனுபவத்தோடு நிற்பவர்கள் பலர். ப்ரபந்தத்தின் பொருள் விளங்க, ஆயிரம் வருடங்களின் முன்னான சொற்களின் பொருள் புரியவேண்டும், அதனைப் பயன்படுத்திய இடத்தின் காட்சியமைப்பு, பின்புலம் புரியவேண்டும்; அதோடு பக்தி பொங்கி வந்தால் மட்டுமே , முழுப்பரிமாணத்தில் ஒரளவு புலப்படும். இதற்கு, பிரபந்தம் திராவிட வேதம் என்றும் தமிழ் மறையென்றும் கூறப்படுவதும் ஓர் காரணம். எளிதில் விளங்கிக் கொள்ள […]

வையகம் வாயில் கண்டவர்…

யசோதை மட்டும்தான் வாயில் வையகம் கண்டாளா? நாம் பார்த்த சினிமா, கேட்ட கதைகளில் யசோதை ‘க்ருஷ்ணா, மண்ணைத் தின்றாயா?” என்று கேட்டதற்கு , கண்ணன் இல்லை எனத் தலையாட்ட, அவள் ‘ வாயைக் காட்டு” என்றதற்கு, வாயைக் காட்ட, அண்ட சராசரங்களும் அதில் கண்டதாக கதை உண்டு. மண்ணை ( பூமியை) விழுங்கினாயா? என்ற கேள்விக்கு ‘இல்லை’என்ற பதில் ‘பூமி மட்டுமல்ல; அனைத்தையும் விழுங்கினேன்’என்ற பொருளில் தலையசைத்ததாகவும், வாயில் அனைத்தயும் உண்டதைக் காட்டியதாகவும் ஒரு பொருள் சொல்லுவார்கள். […]