அஷ்ட ப்ரபந்தம் – முன்னுரை

வைணவ நூட்களை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர் , நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தோடு நின்றுவிடுவார்கள். அதுவும் அதன் ஆழ்பொருள் உணராமலே, அனுசந்திப்பது என்ற அனுபவத்தோடு நிற்பவர்கள் பலர். ப்ரபந்தத்தின் பொருள் விளங்க, ஆயிரம் வருடங்களின் முன்னான சொற்களின் பொருள் புரியவேண்டும், அதனைப் பயன்படுத்திய இடத்தின் காட்சியமைப்பு, பின்புலம் புரியவேண்டும்; அதோடு பக்தி பொங்கி வந்தால் மட்டுமே , முழுப்பரிமாணத்தில் ஒரளவு புலப்படும். இதற்கு, பிரபந்தம் திராவிட வேதம் என்றும் தமிழ் மறையென்றும் கூறப்படுவதும் ஓர் காரணம். எளிதில் விளங்கிக் கொள்ள […]

கோமளவல்லி

கூடப்பிறந்தாத்தான் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ ஆறதில்லை. ஒரு பாட்டுல வரும்பாரு “ சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை; ஒரு துணையிலாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை.”. ரத்த சம்பத்தத்தை மனசுதான் தீர்மானிக்கறது.

ஒரு குயிலைக் குறித்து…

“இந்தி அறியாததால், தமிழர்கள் எதையும் இழக்கவில்லை” இப்படியாக ஒரு விவாதம் கொச்சி பல்கலையின் மாணவர் விடுதியில் 1987 மழைக்காலத்தில் நடந்து கொண்டிருந்தது. அரசியல், மொழிவெறி என்பதைத் தாண்டிய ஒரு ஆரோக்கிய விவாதமாக அது இருந்ததால், பல முறை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறேன். அன்றும் , இக்கருத்தை முன் வைத்தவர் ஒரு மலையாளி. மறுவாதம் செய்ய வேண்டிய சதானந்தன் நாயர் , ஒரேயொரு வார்த்தை சொன்னார். எதிரில் இருந்த வாதி, எழுந்து , மேஜைக்குக் குறுக்கே கை நீட்டி […]

பெரிய சாமி சார்

பெரியசாமி சாரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை – ஆத்தூர் அருகே அவரது கிராமத்தில் 1952ல் பிறந்து வளர்ந்திருந்தால், சாலக்குடியில் ஒரு அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் அவருடன் பணி புரிந்திருந்தால், தற்சமயம் சிவகாசியில் அவரது வீட்டின் அருகில் வசிப்பவராக இருந்தால் ஒருவேளை தெரிந்திருக்கலாம். அப்படியே தெரிந்திருந்தாலும், முகத்தைச் சுருக்கி, புருவம் நெரித்து நினைவில் கொண்டு வர சிரமித்து ” அவரா?அவருக்கென்ன இப்ப?” என்பீர்கள். அந்த அளவு , பரியச்சமானாலும், தனித்து நினைவில் நிற்காத சாதாரணர் இளைஞர்களுக்கான சிந்தனைப் பயிற்சிப் […]

அதிர்ச்சியின் உளவியலும் கம்பராமாயணமும்.

“கம்ப ராமாயண வாசிப்புக் குழு, திருமறை வாசிப்புக் குழு, திருக்குறள் போற்றுதும் என்பதிலெல்லாம் என்ன பயன்? தெரிந்ததைச் சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு dementia இல்லையா?” என்றார் என் நண்பர். சமீபத்தில் கம்ப ராமாயணக்குழு ஒன்றில் இருப்பதைத் தெரிந்துகொண்டதன்பின் அவரது பேச்சு இது. ” என்ன பயன் வேண்டுமென நினைக்கிறீர்கள்?” என்றேன். “ஒண்ணுமில்லைன்னாலும், எதாவது வாழ்க்கைக்குப் பயன்படணும். திருக்குறள் எல்லாம் நேரடியா பயன்படுத்திவிட முடியாது. கம்ப ராமாயணம் பாத்திரப்படைப்பைப் பார்த்து நாம வாழ்ந்துவிட முடியாது. Too much theory […]

சீதம்மாள்.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. “தூத்தல் போடறது. சீக்கிரம் வாசல்ல உலத்தியிருக்கற துணியெல்லாம் எடுங்கோடி”  பரபரத்தாள் வேங்கிப் பாட்டி. எழ முடியாது, கண் பார்வை கொஞ்சம் மங்கல் என்பதுமட்டுமே தொண்ணூற்று நான்கு வயதில் அவளுக்கு   இருக்கும் உபாதைகள். “வேங்கிப்பாட்டிக்கு மூக்கும் நாக்கும் ரொம்பவே தூக்கல். பாரேன். ஒரு துளி தூத்தலுக்கு வர்ற மண் வாசனைபிடிச்சுச் சொல்றா” பவானி மாமி முணுமுணுப்பில் ஒரு வியப்பு தெரிந்தது. “ டீ, இவளே, செத்த வாசல்ல துணியெல்லாம் எடுத்துண்டு வா. நனைஞ்ச்சுடுத்துன்னா, பெரிய […]

இளைஞர்களிடம் பேசும் கலை

“என் பையன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கறான்” என்றார் நண்பர் ஒருவர் மிகுந்த வருத்தத்தோடு. அவனுக்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன். உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த வேலையை உதறி, அழுத்தம் குறைவான ஆனால் சற்றே வருமானம் குறைவான வேலையொன்றில் சேர்ந்துகொண்டு, மகனைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தினார் அவர். இன்று பையன் அவரைக் கண்ணெடுத்தும் காணத் தவிர்க்கிறான். வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். ” நண்பர்களுடன் பேசுவதில் ஒரு பகுதி கூட வீட்டில் […]

தாங்கு மரங்கள்

அவசரமாய்ச் சென்று மொபைலை எடுக்குமுன் அழைப்பு நின்றுவிட்டிருந்தது. “எருமை” என்று பெயர் மிஸ்டு கால் லிஸ்ட்டில் தெரிந்ததில் ஒரு புன்னகையுடன் அழைத்தார் ரமேஷ். “லே, எங்கிட்டுப் போயிட்ட?” என்றார் தாமஸ் மறுபுறம். “ செத்திட்டியா,மூதி! நேத்துலேர்ந்து கால் போட்டிட்டிருக்கேன்” “ஸாரி மக்கா” என்றார் ரமேஷ் “ நானே காலேல கூப்பிடமுன்னு இருந்தேன். மறதி அதிகமாயிட்டிருக்கடே.” “எல்லாருக்கும் அம்பத்து நாலு தாண்டிட்டு. காலேஜ்ல இருந்தமாரியா இப்ப இருக்க முடியுது? சரி, விசயத்தச் சொல்லிடுதேன். இந்த மகாலிங்கம் வர்றான் இங்கிட்டு. […]

நாகலட்சுமி

நாகலெட்சுமி மெஸ் என்ற உணவு விடுதி, ஒரு பெட்ரூம், ஹால் கிட்சன் என்ற வீட்டமைப்பில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. குடியிருப்பு வளாகத்தினுள் வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், எடுப்புச் சாப்பாடு என்ற அளவில் நடந்து வருகிறது. நாகலட்சுமி ,மெஸ் வைக்குமுன் வங்கி ஒன்றில் ஆஃபீஸராக வேலை பார்த்தார் எனவும், பிடிக்காது போகவே, ஊரில் ப்ரைவேட் ட்யூஷன் தொடங்கி, அதன்பின் மெஸ் நடத்தத் தொடங்கினார் என்பதும் கொசுறு செய்திகள். வளாகத்தில் […]

ரங்கம்மாள்

எப்போது ரங்கம்மாள் ,கோபாலயங்கார் வீட்டில் வந்தாள் என எவருக்கும் தெரியவில்லை. கோபாலய்யங்கார் பக்கவாதத்தில் படுத்ததும், முதுகு வளைந்து போன அவரது மனைவி ராஜம், தன்னால் வீட்டையும் பார்த்துக்கொண்டு அவரையும் பார்க்க முடியாதென்று,  அவருக்குப் பணிவிடை செய்ய அவரது ஒன்றுவிட்ட அத்தையின் மகளை திருக்குறுங்குடியில் இருந்து அழைத்து வந்தாள்  என்றும், பிரம்மதேசம் கிராமத்தில் வசித்த அவரது ஒன்றுவிட்ட அக்காவின் மகள் அவள் என்றும், அக்கா இறந்ததும், அவள் இங்கு வந்துவிட்டாள் என்றும் பல கதைகள் உண்டு. எல்லாருக்கும் அறிந்த […]